​​ மத்திய அரசுக்கு இடைக்கால டிவிடெண்டாக ரூ.40,000 கோடியை ரிசர்வ் வங்கி அளிக்கும் என தகவல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மத்திய அரசுக்கு இடைக்கால டிவிடெண்டாக ரூ.40,000 கோடியை ரிசர்வ் வங்கி அளிக்கும் என தகவல்

Published : Jan 07, 2019 6:47 PM

மத்திய அரசுக்கு இடைக்கால டிவிடெண்டாக ரூ.40,000 கோடியை ரிசர்வ் வங்கி அளிக்கும் என தகவல்

Jan 07, 2019 6:47 PM

மத்திய அரசுக்கு இடைக்கால டிவிடெண்டாக 30 ஆயிரம் கோடியில் இருந்து 40 ஆயிரம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி அளிக்கலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

கடன்பத்திரங்களின் மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதியை ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு டிவிடெண்டாக வழங்கி வருகிறது.

நடப்பு நிதி ஆண்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் இடைக்கால டிவிடெண்டாக 40 ஆயிரம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி வழங்கியது. இந்த நிலையில் வரும் மார்ச் மாதத்திற்குள் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்குள் டிவிடெண்ட் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

வருவாய் குறைவு காரணமாக மத்திய அரசுக்கு நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கி அளிக்கும் டிவிடெண்ட் ஓரளவு உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கியிடம் கையிருப்பாக இருக்கும் நிதியில் இருந்து அதிக தொகையை கேட்டு மத்திய அரசு நெருக்கடி தருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.