​​ பந்தன் வங்கி - கிரஹ் பைனான்ஸ் நிறுவனம் இணைக்கப்பட உள்ளதாக தகவல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பந்தன் வங்கி - கிரஹ் பைனான்ஸ் நிறுவனம் இணைக்கப்பட உள்ளதாக தகவல்

Published : Jan 07, 2019 5:38 PM

பந்தன் வங்கி - கிரஹ் பைனான்ஸ் நிறுவனம் இணைக்கப்பட உள்ளதாக தகவல்

Jan 07, 2019 5:38 PM

பந்தன் வங்கியும், எச்.டி.எஃப்.சி. வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள கிரஹ் பைனான்ஸ் நிறுவனமும் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீட்டுக்கடன்களை வழங்கி வரும் கிரஹ் பைனான்ஸ் நிறுவனம், எச்.டி.எஃப்.சி. வங்கியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எச்.டி.எஃப்.சி. வங்கியிடம் கிரஹ் பைனான்ஸ் நிறுவனத்தின் 58 சதவீத பங்குகளை இருக்கும் நிலையில், தற்போது பந்தன் வங்கியுடன் இணைக்கப்பட உள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுவதோடு, பந்தன் வங்கியுடனான இணைப்பின் காரணமாக, கிரஹ் நிறுவனத்தில் எச்.டி.எஃப்.சி. வங்கியின் பங்கு சதவீதம் 10ஆக குறைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.