​​ பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளியது தொடர்பான வழக்கு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளியது தொடர்பான வழக்கு

Published : Jan 07, 2019 4:32 PM

பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளியது தொடர்பான வழக்கு

Jan 07, 2019 4:32 PM

பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளியது தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட பாதிரியார் உள்ளிட்ட 16 பேருக்கு கடலூர் மகளிர் நீதிமன்றம் தண்டனை விவரங்களை அறிவித்துள்ளது. 

திட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 8 மற்றும் 9 ஆம் வகுப்பு படித்து வந்த 2 மாணவிகள் மாயமான நிலையில், மதபோதகர் அருள்தாஸ் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

வடலூரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சதீஷ்குமார் என்ற நபரிடமிருந்து மாணவிகள் இருவரையும் போலீசார் மீட்டனர். திட்டக்குடியைச் சேர்ந்த தனலெட்சுமி என்பவர் மாணவிகளை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும், பின்னர் லெட்சுமி, கலா, ஜெமீனா, சதீஷ்குமார் உள்ளிட்ட நபர்களிடம் மாறி மாறி விற்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதும் அம்பலமானது.

இந்த வழக்கில் 16 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டவர் ஆனந்தராஜ், பாலசுப்ரமணியன் ஆகிய இரண்டு பேருக்கு தலா 4 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கலா, தனலட்சுமி, ஸ்ரீதர், பாத்திமா, மோகன்ராஜ்,
மதிவாணன் ஆகிய 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், அன்பு என்கிற செல்வராஜூக்கு 3 ஆயுள் தண்டனையும், அறிவிக்கப்பட்டுள்ளது. மதபோதகர் அருள்தாசுக்கு 30 வருடமும், மற்ற 7 பேருக்கு 10 முதல் 20 ஆண்டுகளும் சிறை தண்டனை அறிவித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குற்றவாளி என அறிவிக்கப்பட்ட 16 பேரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.