​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜன. 8, 9 - மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

Published : Jan 07, 2019 2:31 PM

ஜன. 8, 9 - மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

Jan 07, 2019 2:31 PM

மத்திய அரசு ஊழியர் தொழிற்சங்கங்கள் நாளை மற்றும் நாளை மறுதினம் நடத்துவதாக அறிவித்துள்ள நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை  எச்சரித்துள்ளது.

போராட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள சில சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.அதில் அரசு நிர்வாகத்தை பாதிக்கும் வகையில் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்துவது விதிமுறையை மீறும் செயல் என்றும் கூறப்பட்டுள்ளது.

வேலை நிறுத்த நாட்களில் விடுப்பு எடுக்கக் கூடாது என்றும், அன்று பணிக்கு வராதவர்கள் பட்டியல் காலை 10.30 மணிக்குள் பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வேலை நிறுத்த நாட்களில் விடுப்பு எடுத்தால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது