​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

Published : Jan 07, 2019 12:37 PM

18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

Jan 07, 2019 12:37 PM

18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

காலியாக உள்ள 18 தொகுதிகளில் 27 லட்சம் வாக்காளர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய பிரதிநிதிகள் இல்லாத சூழல் இருப்பதாக கூறி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, இதுதொடர்பாக தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு மனுதாரர் தரப்பில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 22ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.