​​ இந்திய ரிசர்வ் வங்கியிடம் நேபாளம் கோரிக்கை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய ரிசர்வ் வங்கியிடம் நேபாளம் கோரிக்கை

Published : Jan 06, 2019 6:59 PMஇந்திய ரிசர்வ் வங்கியிடம் நேபாளம் கோரிக்கை

Jan 06, 2019 6:59 PM

இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 200, 500, 2000 ரூபாய் நோட்டுகள் நேபாளத்தில் செல்லும் என்று அறிவிக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பு ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்று வெளியிட்டது. அதன்படி நேபாள குடிமக்கள் இந்தியாவின் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்குள்தான் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் நேபாளத்தில் புதிய ரூபாய் நோட்டுகள் பயன்படுத்துவது குறித்து எந்த அறிவிப்பும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை.

இதனால் இந்தியாவின் 200,500,2000 ரூபாய் நோட்டுகள் நேபாளத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்க வசதியாக அந்த ரூபாய் நோட்டுகள் நேபாளத்தில் செல்லும் என்று அறிவிக்குமாறு நேபாளத்தின் மத்திய வங்கியான நேபாள் ராஷ்டிர வங்கி, இந்திய ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. அதே போன்று செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் 4 கோடியே 80 லட்சம் ரூபாயை மாற்றித் தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.