ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களுக்கான தேவை குறித்து பட்டியல் அளிக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. 2019- 2020 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை தயார் செய்யும் பணிகள், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த கல்வி ஆண்டில் 9ஆம் வகுப்புக்கு முப்பருவ பாடப்புத்தக முறை கைவிடப்படுகிறது. இந்த நிலையில், 32 மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும், தங்கள் மாவட்டத்திற்கு தேவைப்படும் பாடப் புத்தகங்கள் தொடர்பாக உத்தேசமாக ஒரு பட்டியலை தயாரித்து, நாளை மாலை 3 மணிக்குள்ளாக அனுப்பி வைக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.