​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
”15 பேர் உயிருக்கு போராட்டம்... பிரதமர் மோடியோ புகைப்படத்திற்கு போஸ்...” - ராகுல் காந்தி

Published : Dec 26, 2018 6:02 PM



”15 பேர் உயிருக்கு போராட்டம்... பிரதமர் மோடியோ புகைப்படத்திற்கு போஸ்...” - ராகுல் காந்தி

Dec 26, 2018 6:02 PM

மேகலாயாவில் 15 பேர் சுரங்கத்திற்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, பிரதமர் மோடியோ புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், மேகலாயாவில் வெள்ளம் புகுந்த சுரங்கத்திற்குள் இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 15 பேர் மூச்சு விட சிரமப்பட்டுக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். ஆனால் அதேவேளையில் பிரதமர் மோடியோ, அசாமில் உள்ள போகிபீல் பாலத்தில் நின்று கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதாக ராகுல் காந்தி சாடியுள்ளார்.

சுரங்கத்தில் சிக்கி இருப்பவர்களைக் காப்பாற்ற அதி அழுத்த குழாய் வசதிக்கு ஏற்பாடு செய்யவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள அவர், 15 பேரையும் காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.