​​ மத்திய அரசிடம் இருந்து கஜா புயல் நிவாரண நிதியை பெற தமிழக அரசு தீவிரம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மத்திய அரசிடம் இருந்து கஜா புயல் நிவாரண நிதியை பெற தமிழக அரசு தீவிரம்

Published : Dec 19, 2018 10:46 AM

மத்திய அரசிடம் இருந்து கஜா புயல் நிவாரண நிதியை பெற தமிழக அரசு தீவிரம்

Dec 19, 2018 10:46 AM

கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசிடம் இருந்து தேவையான நிவாரண நிதியைப் பெறுவதற்காக, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையிலான குழுவினர் டெல்லி சென்றுள்ளனர்.

கஜா புயலுக்கு நிவாரண நிதியாக, 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என பிரதமர் மோடியை சந்தித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வலியுறுத்தினார். இதையடுத்து, தமிழகம் வந்த மத்தியக்குழு அதிகாரிகள், கஜா புயல் பாதித்த நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்து, பொதுமக்களிடமும் கேட்டறிந்தனர். மத்தியக் குழுவினர் ஆய்வை முடித்து, பல நாட்கள் கடந்துவிட்ட நிலையில், இன்னும் மத்திய அரசிடம் அறிக்கை அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால், மத்திய அரசின் சார்பில் நிவாரண நிதி குறித்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. எனவே, கஜா புயல் பாதிப்புகளை சீர்செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நிவாரண நிதிகளை வழங்குவதற்காகவும், நிதி ஒதுக்கீடு செய்யுமாறு, மத்திய அரசிடம் வலியுறுத்துவதற்காக, தமிழக அரசு சார்பில் குழு டெல்லி சென்றுள்ளது. தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையிலான இந்த குழுவில், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உள்ளிட்ட அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் இன்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் தமிழகம் வந்த மத்தியக் குழுவில் இடம்பெற்றிருந்த அதிகாரிகளைச் சந்தித்து, புயல் பாதிப்பு குறித்த அறிக்கை குறித்து ஆலோசிப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.