​​ சிபிஐ கூடுதல் இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்: மத்திய அரசு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிபிஐ கூடுதல் இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்: மத்திய அரசு

Published : Dec 19, 2018 6:47 AM



சிபிஐ கூடுதல் இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்: மத்திய அரசு

Dec 19, 2018 6:47 AM

மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.-யின் இடைக்கால இயக்குநரான நாகேஸ்வர ராவை, கூடுதல் இயக்குநராக நியமித்து, மத்திய அரசு அறிவித்துள்ளது.

சி.பி.ஐ.யின் இயக்குனரான அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனரான ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே நிலவிய பனிப்போரால், இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம் 24ஆம் தேதி சிபிஐ இணை இயக்குநரான நாகேஸ்வர ராவை, தற்காலிக சி.பி.ஐ. இயக்குநராக மத்திய அரசு நியமித்தது.

இந்நிலையில், மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், நாகேஸ்வர ராவ், பதவி உயர்வுடன் சி.பி.ஐ. கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.