​​ சீனா, சவூதி அரேபியாவில் இருந்து ஹேக்கர்கள் பல்வேறு நபர்களின் ட்விட்டர் கணக்குகளில் ஊடுருவியிருக்கலாம் என தகவல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீனா, சவூதி அரேபியாவில் இருந்து ஹேக்கர்கள் பல்வேறு நபர்களின் ட்விட்டர் கணக்குகளில் ஊடுருவியிருக்கலாம் என தகவல்

Published : Dec 18, 2018 3:32 PM

சீனா, சவூதி அரேபியாவில் இருந்து ஹேக்கர்கள் பல்வேறு நபர்களின் ட்விட்டர் கணக்குகளில் ஊடுருவியிருக்கலாம் என தகவல்

Dec 18, 2018 3:32 PM

சீனா மற்றும் சவூதி அரேபியாவில் இருந்து ஹேக்கர்கள் பல்வேறு நபர்களின் ட்விட்டர் கணக்குகளில் ஊடுருவியிருக்கலாம் என தகவல் வெளியான நிலையில், அந்நிறுவன பங்குகள் சுமார் 7 சதவீதம் அளவுக்கு சரிவைச் சந்தித்தன.

இதுதொடர்பான குறைபாட்டை கடந்த நவம்பர் 15ஆம் தேதி கண்டறிந்து, ஒரே நாளில் சரிசெய்துவிட்டதாக ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட விவரங்கள் எதுவும் திருடப்படவில்லை என்றும், தொலைபேசி எண்களுக்கான நாடுகளைக் குறிக்கும் குறியீடுகள் மற்றும் கணக்குகள் ட்விட்டரால் முடக்கப்பட்டுள்ளனவா என்ற விவரங்கள் மட்டுமே திருடப்பட்டிருக்கக் கூடும் எனவும் ட்விட்டர் கூறியுள்ளது.

இந்த வேலையை செய்த ஹேக்கர்கள் சம்மந்தப்பட்ட அரசுகளின் ஆதரவைப் பெற்றவர்களாக இருக்கக்கூடும் என்றாலும், அதை ட்விட்டர் உறுதிப்படுத்தவில்லை. இதனிடையே, இந்த தகவல் வெளியானதால் ட்விட்டர் நிறுவன பங்குகள் சுமார் 7 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்தன.