​​ கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்காக மின்சாரம் திருட்டு - ஜெயக்குமார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்காக மின்சாரம் திருட்டு - ஜெயக்குமார்

Published : Dec 18, 2018 12:33 PM

கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்காக மின்சாரம் திருட்டு - ஜெயக்குமார்

Dec 18, 2018 12:33 PM

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் அலிம்கோ நிறுவனத்துடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் முகாம் சென்னை ராயபுரத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயகுமார், சரோஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்காக சென்னை மாநகராட்சியின் மின்சாரம் திருடப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாகவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார். கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற தலைவர்களில் ஒருவராவது காவிரி, மேகதாது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.