​​ வருமான வரித்துறை நடவடிக்கைக்கு எதிரான டி.டி.வி.தினகரனின் வழக்குகள் தள்ளுபடி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வருமான வரித்துறை நடவடிக்கைக்கு எதிரான டி.டி.வி.தினகரனின் வழக்குகள் தள்ளுபடி

Published : Dec 14, 2018 6:27 PM

வருமான வரித்துறை நடவடிக்கைக்கு எதிரான டி.டி.வி.தினகரனின் வழக்குகள் தள்ளுபடி

Dec 14, 2018 6:27 PM

வருமான வரித்துறை நடவடிக்கையை எதிர்த்து டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

டி.டி.வி. தினகரனின் 1995 - 96 மற்றும் 1996 - 97- வருமான வரி கணக்குகளை  மறுஆய்வு செய்ய வருமான வரித்துறை கடந்த 2001-ஆம் ஆண்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதை ரத்து செய்யக் கோரி டி.டி.வி.தினகரன் தொடர்ந்த 2 வழக்குகள் 16 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன.

விசாரணையின் போது தினகரன் வெளிநாட்டு முதலீடுகளை மறைத்ததாகவும், அவரது வீடு, அலுவலகங்களில் முக்கிய ஆவணங்களை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்துள்ளதாகவும், இதுதொடர்பாக  அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிம் வருமான வரித்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க தினகரனுக்கு உத்தரவிட்டு வழக்குகளை தள்ளுபடி செய்தார்.