​​ தமிழக கோவில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக கோவில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவு

Published : Dec 14, 2018 6:11 PM

தமிழக கோவில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவு

Dec 14, 2018 6:11 PM

தமிழக கோவில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற இந்துசமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பாலி தீர்த்தம் அருகே பக்த மார்கண்டேயர் கோவில் சிலைகளை அகற்றியும் கோவிலை ஆக்கிரமித்தும் 9 பேர் அடுக்குமாடி கட்டிடம் கட்டியுள்ளதாகவும், அந்த வழக்கை காவல்துறை முறையாக விசாரிக்காததால் வேறு அமைப்பிற்கு மாற்றக்கோரியும் வழக்கு தொடரப்பட்டது. கட்டிடத்தை இடித்துவிட்டு மீண்டும் அதே சிலைகளுடன் கோவிலைக் கட்டக் கோரி மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது.

இந்த வழக்குகளின் விசாரணையின் போது கோவிலை ஆக்கிரமித்தவர்கள் மீதான வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என இந்து அறிநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது மெத்தனமாக செயல்பட்ட காவல்துறையினரை ஏன் பணியிடை நீக்கம் செய்ய கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் கோவிலை ஆக்கிரமித்தவர்களை உடனடியாக கைது செய்யவும், திருவண்ணாமலை டி.எஸ்.பி. நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டனர். மேலும் தமிழக கோவில்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.