​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தன்னை எதிர்ப்பவர்களை துன்புறுத்த நினைக்கிறார் மோடி - காங்கிரஸ்

Published : Dec 08, 2018 3:16 PM



தன்னை எதிர்ப்பவர்களை துன்புறுத்த நினைக்கிறார் மோடி - காங்கிரஸ்

Dec 08, 2018 3:16 PM

பிரதமர் மோடி ஒரு தாதா போல நடந்துகொள்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

டெல்லியில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவின் அலுவலகம் மற்றும் அவரது கூட்டாளிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ((Randeep Singh Surjewala)) டெல்லியில் மட்டுமின்றி, நொய்டாவில் வதேராவின் சகோதரி மற்றும் உறவினர் வீடுகளிலும் அமலாக்கத்துறை, "சர்ச் வாரண்ட்" இல்லாமல் சோதனை நடத்தியதாகக் குற்றம்சாட்டினார்.

தீய உள்நோக்கத்துடன் கூடிய அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அதன் உச்சத்தை எட்டியிருப்பதாகவும், தன்னை எதிர்ப்பவர்களை துன்புறுத்தும் தாதா போல மோடி நடந்துகொள்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நடைபெற்று முடிந்துள்ள சட்டமன்ற தேர்தல்களில் தோல்வி உறுதி என்பதால் மோடி அச்சத்தில் இருப்பதாகவும், அதிலிருந்து கவனத்தை மடைமாற்றுவதற்காக சோதனைகள் நடத்தப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் புகார் கூறியுள்ளார்.