​​ மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலை விவகாரம் பொன் மாணிக்கவேல் கோரிக்கை நிராகரிப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலை விவகாரம் பொன் மாணிக்கவேல் கோரிக்கை நிராகரிப்பு

Published : Dec 07, 2018 8:18 PM

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலை விவகாரம் பொன் மாணிக்கவேல் கோரிக்கை நிராகரிப்பு

Dec 07, 2018 8:18 PM

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான புகார் குறித்து இந்து சமய அறநிலையத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்த போது, மயில் சிலை மாற்றப்பட்டது குறித்த அறநிலையத்துறையின் விசாரணை குழுவால், தங்கள் விசாரணைக்கு இடையூறு ஏற்படுவதால் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் கோரினார்.

துறை ரீதியான விசாரணையும், குற்ற வழக்கு விசாரணையும் ஒரே நேரத்தில் நடைபெறலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர்.

ஒரு சிலை பாதுகாப்பு மையத்தில் 42 சிலைகள் போலியானவை எனவும், அச்சிலைகளை ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கோரினார்.

தமிழகத்தில் தற்போது உள்ள 19 சிலை பாதுகாப்பு மையங்களிலும் உள்ள அனைத்து சிலைகளையும் படிப்படியாக தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.