​​ பாஜக மீது வீசப்படும் சேற்றில் தாமரை மலரும் : தமிழிசை செளந்தரராஜன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாஜக மீது வீசப்படும் சேற்றில் தாமரை மலரும் : தமிழிசை செளந்தரராஜன்

Published : Dec 07, 2018 6:25 PM

பாஜக மீது வீசப்படும் சேற்றில் தாமரை மலரும் : தமிழிசை செளந்தரராஜன்

Dec 07, 2018 6:25 PM

தமிழ்நாட்டில் குளத்திலும், களத்திலும் தாமரை மலரும் என தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்திருக்கிறார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சியில் தலைமை அலுவலகத்தில் இருந்து, பாஜக சார்பில், கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், பாஜக மீது வீசப்படும் சேற்றில் தாமரை மலரும் என்றார்.

தமிழ்நாட்டில் கலப்புத் திருமணங்கள் இயல்பாக, அன்பால் வரவேண்டும் என்றும் அராஜகத்தால் வரக்கூடாது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார்.