​​ 7 பேர் விடுதலைக்கு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுத்துள்ளது - மாஃபா பாண்டியராஜன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
7 பேர் விடுதலைக்கு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுத்துள்ளது - மாஃபா பாண்டியராஜன்

Published : Dec 07, 2018 4:45 PM

7 பேர் விடுதலைக்கு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுத்துள்ளது - மாஃபா பாண்டியராஜன்

Dec 07, 2018 4:45 PM

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுத்திருப்பதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

காந்தியடிகளின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி, சென்னை தியாகராயர் நகரில் உள்ள தக்கர்பாபு வித்யாலயா தொழிற்பள்ளியில் நடைபெற்றது.

இதில் பங்கேற்று பரிசளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், 7 பேர் விடுதலை குறித்து முடிவெடுக்க வேண்டியது தமிழக ஆளுநர்தான் என்று குறிப்பிட்டார். பொன் மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு எதிராக தமிழக அரசு மேல் முறையீடு செய்திருப்பது குறித்த கேள்விக்கு, கருத்துக் கூற விரும்பவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.