​​ தமிழகம்-அந்தமான் நிக்கோபர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகம்-அந்தமான் நிக்கோபர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

Published : Dec 07, 2018 11:26 AM



தமிழகம்-அந்தமான் நிக்கோபர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

Dec 07, 2018 11:26 AM

தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கும், அந்தமான் நிக்கோபர் தீவுகளின் கல்வித்துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அந்தமான் நிக்கோபர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி, கல்வியியல் மற்றும் ஆராய்ச்சிப் பணி ஆகியவற்றில் தமிழக பள்ளிக் கல்வித்துறை உதவவுள்ளது.

தேசியளவிலான திறனறிவுத் தேர்வுக்கு மாணவர்களின் குறைதீர் பயிற்சி வழங்குவது, தமிழக பள்ளிக் கல்வித்துறை இணையத்தில் பதிவேற்றிய பாடநூல்கள், பாடத்துக்கான காணொலிகள், இணைய தளங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்டவற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை உதவுகிறது. தேவைப்பட்டால், தமிழக ஆசிரியர்கள் அந்தமான் நிக்கோபர் தீவுக்கு அனுப்பி பயிற்சியளிப்பதும், அங்குள்ள ஆசிரியர்கள் பயிற்சிக்காக இங்கு வரவழைப்பதும் என புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.