​​ IBM நிறுவனத்துடன் 12,700 கோடி ரூபாய்க்கு மென்பொருட்களை வாங்க HCL Tech பேச்சு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
IBM நிறுவனத்துடன் 12,700 கோடி ரூபாய்க்கு மென்பொருட்களை வாங்க HCL Tech பேச்சு

Published : Dec 07, 2018 10:34 AM



IBM நிறுவனத்துடன் 12,700 கோடி ரூபாய்க்கு மென்பொருட்களை வாங்க HCL Tech பேச்சு

Dec 07, 2018 10:34 AM

இந்தியாவின் எச் சி எல் டெக்னாலஜீஸ் நிறுவனம் அமெரிக்காவின் ஐபிஎம் நிறுவனத்திடம் இருந்து பன்னிரண்டாயிரத்து எழுநூறு கோடி ரூபாய் மதிப்புக்கு மென்பொருட்களைக் கொள்முதல் செய்ய உள்ளது.

டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட எச் சி எல் நிறுவனம் ஆப்ஸ்கேன், நோட்ஸ் அண்ட் டாமினோ உள்ளிட்ட பல்வேறு மென்பொருட்களை வாங்குவதற்காக அமெரிக்காவின் ஐபிஎம் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருகிறது.

இதற்கான உடன்படிக்கை அடுத்த ஆண்டில் கையொப்பமாக உள்ளது. பன்னிரண்டாயிரத்து எழுநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த மென்பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பு, சந்தை, வணிகம் ஆகிய துறைகளில் பயன்படுத்தக் கூடியவை ஆகும்.