​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேகதாது விவகாரத்தில் திமுகவின் ஆதரவை கூடுதல் பலமாக எடுத்துக் கொண்டு துணிச்சலோடு மத்திய அரசை எதிர்க்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

Published : Dec 07, 2018 9:34 AM

மேகதாது விவகாரத்தில் திமுகவின் ஆதரவை கூடுதல் பலமாக எடுத்துக் கொண்டு துணிச்சலோடு மத்திய அரசை எதிர்க்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

Dec 07, 2018 9:34 AM

மேகதாது அணை விவகாரத்தில், திமுக அளிக்கும் ஆதரவை கூடுதல் பலமாக எடுத்துக் கொண்டு, ஆளும் அதிமுக அரசு, துணிச்சலோடு, மத்திய அரசுக்கு எதிராகப் போராட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மேகதாது அணை விவகாரத்தில், புதிய அணை கட்ட மத்திய நீர்வள குழுமம் வழங்கிய அனுமதியைத் திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில், ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த தீர்மானத்தின் மீது பேசிய, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் ஜீவாதார பிரச்சினையான காவிரி விவகாரத்தில், தமிழ்நாடு அரசுக்கு திமுக முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றார்.

மத்திய நீர்வள ஆணையத்திற்கும், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கும், ஒருவரே, தலைவராக இருக்கும் முறையை மாற்றாமல், மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக, காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் ராமசாமி தெரிவித்திருக்கிறார்.