​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஏப். 14 - அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு சுற்றுலா ரயில்

Published : Dec 07, 2018 9:29 AM



ஏப். 14 - அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு சுற்றுலா ரயில்

Dec 07, 2018 9:29 AM

அம்பேத்கரின் 128-வது பிறந்த நாளை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் சமந்தா எக்ஸ்பிரஸ் என்ற சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து 12 நாள் சுற்றுலாவாக புறப்படும் இந்த ரயில் அம்பேத்கர் பிறந்த இடமான மோ ((Mhow)) நகர் மற்றும் மும்பை உட்பட அவர் வாழ்க்கையில் தொடர்புடைய இடங்களையும் அவர் புத்த மதத்தை தழுவியதை குறிக்கும் வகையில் இந்தியா மற்றும் நேபாளத்தில் உள்ள புத்த மத தலங்களான புத்தகயா, சாரநாத், குஷிநகர், லும்பினி உள்ளிட்ட இடங்களை இணைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணத்தின் இடையே பல்வேறு இடங்களில் பேருந்துகளில் சுற்றிப்பார்த்தல், தங்கும் இடங்கள், உணவு உள்ளிட்டவற்றைக் கொண்ட இந்த சுற்றுலாத் திட்டத்தில் ஒரு நபருக்கு 11 ஆயிரத்து 340 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.