​​ முதல் டெஸ்ட் - ஆஸி. நிதான ஆட்டம்... முதல் இன்னிங்சை இழந்தது இந்தியா
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முதல் டெஸ்ட் - ஆஸி. நிதான ஆட்டம்... முதல் இன்னிங்சை இழந்தது இந்தியா

Published : Dec 07, 2018 8:05 AM

முதல் டெஸ்ட் - ஆஸி. நிதான ஆட்டம்... முதல் இன்னிங்சை இழந்தது இந்தியா

Dec 07, 2018 8:05 AM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின், முதல் இன்னிங்சில் இந்திய அணி 250 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அடிலெய்டில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் கோலி உள்பட இந்திய அணி வீரர்கள், சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், புஜாரா மட்டும் நிலைத்து நின்று சதமடித்தார்.

நேற்றைய ஆட்டநேர முடிவில், இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 250 ரன் எடுத்திருந்தது. இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியதும், ரன் எதுவும் எடுக்காத நிலையில், 3வது பந்திலேயே இஷாந்த் சர்மா ஆட்டமிழந்ததால், இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அதிகபட்சமாக புஜாரா 123 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.