​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேதர்நாத் படத்திற்கு தடையில்லை என உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு

Published : Dec 07, 2018 7:47 AM

கேதர்நாத் படத்திற்கு தடையில்லை என உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு

Dec 07, 2018 7:47 AM

கேதர்நாத் இந்திப்படத்திற்கு தடை விதிக்க உத்தரகாண்ட் அரசு மறுத்து விட்டது. நடிகர் சைப் அலி கானின் மகள் சாரா கான் கதாநாயகியாக அறிமுகமாகும் திரைப்படம்தான் கேதர்நாத். மத உணர்வுகளைப் புண்படுத்துவதால் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து நான்கு பேர் கொண்ட குழு ஒன்று உத்தரகாண்ட் சுற்றுலாத்துறை அமைச்சர் சத்பால் மகாராஜ் தலைமையில் அமைக்கப்பட்டது.

இக்குழு படத்தைப் பார்வையிட்டு திரையிட எந்த ஆட்சேபமும் இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து திட்டமிட்டபடி இந்தியாவின் இதர பகுதிகளிலும் உத்தரகாண்ட்டிலும் கேதர் நாத் படம் இன்று வெளியாகியுள்ளது.