​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடியை சந்தித்தார் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

Published : Dec 07, 2018 7:42 AM



பிரதமர் மோடியை சந்தித்தார் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

Dec 07, 2018 7:42 AM

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.கும்ப மேளா நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வருமாறு பிரதமரிடம் நேரில் அழைப்பு விடுத்த அவர் புலந்தர் சஹரில்  வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட சம்பவம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். 

இதனிடையே  மாநிலத்தில் வன்முறையையும் சட்ட ஒழுங்கையும் கவனிக்காமல் யோகி ஆதித்யநாத் தெலுங்கானா பிரச்சாரத்தில் ஈடுபட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உத்தரப்பிரதேச அரசு உறுதியளித்துள்ளது.