​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய்மாமனும் உடந்தையாக இருந்த சிறுமியின் தாயாரையும் கைது செய்தது போலீஸ்

Published : Dec 07, 2018 7:39 AM



சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய்மாமனும் உடந்தையாக இருந்த சிறுமியின் தாயாரையும் கைது செய்தது போலீஸ்

Dec 07, 2018 7:39 AM

நீலகிரி மாவட்டம் உதகையில் 8 வயது சிறுமியை பாலியல் ரீதியாக சீண்டியதாக தாய்மாமனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அதற்கு உடந்தையாக இருந்த தாயையும் கைது செய்தனர். உதகையை சேர்ந்த 8 வயது சிறுமியை, அவரது தாய்மாமன் பாலியல் ரீதியாக சீண்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தாயிடம் கூறியபோது, அவரும் அதை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். பள்ளிக்குச் சென்ற மாணவி, தமது ஆசிரியர்களிடம், தாய்மாமனின் நடவடிக்கைகளை கூறியுள்ளார். இதையடுத்து, ஆசிரியர்கள் அளித்த புகாரின் பேரில், மாணவியின் தாய்மாமனை கைது செய்த போலீசார், அதற்கு உடந்தையாக இருந்ததாக, மாணவியின் தாயையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.