​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிறையில் இருந்து வெளிவந்தவரை மீண்டும் கைது செய்ய முயற்சி - வழக்கறிஞர் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு

Published : Dec 07, 2018 7:21 AM



சிறையில் இருந்து வெளிவந்தவரை மீண்டும் கைது செய்ய முயற்சி - வழக்கறிஞர் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு

Dec 07, 2018 7:21 AM

கோவை மத்திய சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த கைதியை, மற்றொரு வழக்கில், போலீசார் கைது செய்ய முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். கடந்த ஒரு மாதமாக கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாருக்கு, தாராபுரம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதை அறிந்த விருதுநகர் போலீசார், ஜெயக்குமாருக்கு கொள்ளை வழக்கு ஒன்றில் தொடர்பிருப்பதாகக் கூறி, அவரை கைது செய்வதற்காக, கோவை மத்திய சிறை வாசலிலேயே காத்திருந்தனர். ஜெயக்குமார் சிறையில் இருந்து வெளியில் வந்ததும், விருதுநகர் போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். அதற்கு ஜெயக்குமார், அவரது வழக்கறிஞரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து, அவர்களை சமாதானம் செய்த உள்ளூர் போலீசார், காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, விருதுநகர் போலீசார், ஜெயக்குமாரை கைது செய்து, அழைத்துச் சென்றனர்.