​​ செங்கல்பட்டு அருகே சிக்னல் கோளாறால் ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்....பயணிகள் கடும் தவிப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செங்கல்பட்டு அருகே சிக்னல் கோளாறால் ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்....பயணிகள் கடும் தவிப்பு

Published : Dec 07, 2018 7:13 AMசெங்கல்பட்டு அருகே சிக்னல் கோளாறால் ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்....பயணிகள் கடும் தவிப்பு

Dec 07, 2018 7:13 AM

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.    தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த அனைத்து ரயில்களும் சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு செங்கல்பட்டு வழியாக சென்ற ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இதனால் பயணிகள்   சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று சீரமைப்பு பணி மேற்கொண்டதை அடுத்து சுமார் ஒரு மணி நேர தாமதத்திற்குப் பின் ரயில்கள் புறப்பட்டுச் சென்றன..