​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதிய வேளாண் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்... வேளாண் பொருட்களுக்கு சர்வதேச சந்தையை உருவாக்க நடவடிக்கை

Published : Dec 07, 2018 6:51 AM

புதிய வேளாண் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்... வேளாண் பொருட்களுக்கு சர்வதேச சந்தையை உருவாக்க நடவடிக்கை

Dec 07, 2018 6:51 AM

விவசாயிகளின் வருமானத்தை 2022ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவதற்கு பிரதமர் மோடி உறுதியேற்றுள்ள நிலையில் வேளாண் பொருட்களின் ஏற்றுமதிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தேயிலைத் தூள், காப்பி பவுடர், அரிசி போன்றவற்றின் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. உள்நாட்டு வேளாண் பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் நல்ல விலை கிடைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த வேளாண் ஏற்றுமதி கொள்கைக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது. செங்கோட்டையில் சுதந்திர தின உரையில் ஏற்கனவே பிரதமர் மோடி விரைவில் புதிய வேளாண் கொள்கை உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு டிவிட்டர் மூலம் புதிய வேளாண் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை உறுதி செய்துள்ளார்.