​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

Published : Dec 07, 2018 6:45 AM

தெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

Dec 07, 2018 6:45 AM

தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அரசியல் பிரபலங்களும், திரைப்பட நட்சத்திரங்களும் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு, தெலுங்கானா மாநிலம் முழுவதும் ஒன்றரை லட்சம் போலீசாரும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நக்சலைட் ஆதிக்கமுள்ள 13 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே, பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். அவர்களுடன் திரைப்பட நடிகர் நாகர்ஜுனா, அவரது மனைவி அமலா, நடிகர் அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் வரிசையில் நின்று வாக்களித்தனர். அதேபோல், தெலுங்கானா துணை முதலமைச்சர் கதியான் ஸ்ரீஹரியும் தமது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.

 

ராஜஸ்தான் மாநிலத்தில், காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வரும் நிலையில், முதலமைச்சர் வசுந்தரா ராஜே, மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உள்ளிட்டோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.