​​ உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் திருப்பூர், திருச்சி, சென்னை நகரங்கள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் திருப்பூர், திருச்சி, சென்னை நகரங்கள்

Published : Dec 06, 2018 9:59 PM

உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் திருப்பூர், திருச்சி, சென்னை நகரங்கள்

Dec 06, 2018 9:59 PM

ஆக்ஸ்ஃபோர்ட் பொருளியல் கணிப்பின் படி உலகிலேயே அதிகம் வளர்ச்சி பெறும் நகரங்களின் பட்டியலில், முதல் 20 இடங்களில் திருப்பூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட 17 இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.

ஆக்ஸ்ஃபோர்ட் பொருளியல் துறை சார்பில் ஆண்டுதோறும் உலகளாவிய நகரங்களின் ஆய்வுப் பட்டியல் தயாரித்து வெளியிடும். அதன்படி 2018 முதல் 2035-ம் ஆண்டு வரை அதிக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் படி அதிவேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் முதல் 20 நகரப் பட்டியலில் இந்திய நகரங்களே 17-ஐ நிரப்பியுள்ளன.

சூரத், ஆக்ரா, பெங்களூரு, ஐதராபாத், நாக்பூர் உள்ளிட்ட இடங்கள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. உலகளாவிய பட்டியலில் 6-வது இடத்தில் திருப்பூர் சராசரி ஆண்டு ஜி.டி.பி. 8.36% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

8-வது இடத்தில் திருச்சி 8.29% ஜி.டி.பி. உடனும், சென்னை 8.17% ஜி.டி.பி. யும் பொருளாதார வளர்ச்சி அடையும் என கணித்துள்ளது.