​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜப்பான் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான அமெரிக்க விமானங்கள்

Published : Dec 06, 2018 9:46 PM

ஜப்பான் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான அமெரிக்க விமானங்கள்

Dec 06, 2018 9:46 PM

ஜப்பான் கடற்பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் 2 விமானங்கள் விபத்துக்குள்ளானதில், 6 வீரர்கள் மாயமாகினர்.

அமெரிக்கா - ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த கடற்படை விமானங்கள் ஜப்பான் கடற்பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. அப்போது அமெரிக்காவின் 2 விமானங்கள், வானில் பறந்து கொண்டே எரிபொருள் நிரப்பும் பயிற்சியை மேற்கொண்டது.

சி 130 விமானத்தில் 5 பேரும், எஃப்.ஏ. 18 ரக விமானத்தில் 2 பேரும் இருந்தனர். அப்போது, 2 விமானங்களும் ஒன்றுக்கொன்று உரசியதில் விபத்து நேரிட்டது. இதையறிந்த இரு நாட்டு அதிகாரிகளும் விமானங்களில் இருந்தவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான எஃப்.ஏ. ரக விமானத்திலிருந்து ஒருவர் கடலில் தத்தளித்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மற்ற 6 பேரையும் மீட்பதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.