​​ என்னை திருடன் என்று அழைப்பதை நிறுத்துங்கள் - விஜய் மல்லையா
Polimer News
Polimer News Tamil.
Advertisement
என்னை திருடன் என்று அழைப்பதை நிறுத்துங்கள் - விஜய் மல்லையா

Published : Dec 06, 2018 9:43 PM

என்னை திருடன் என்று அழைப்பதை நிறுத்துங்கள் - விஜய் மல்லையா

Dec 06, 2018 9:43 PM

தன்னை திருடன் என்று அழைப்பதை நிறுத்துமாறு விஜய் மல்லையா டுவிட்டர் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரபல தொழிலதிபராக இருந்த அவர், இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடன் பெற்று திருப்பிச் செலுத்த முடியாமல், கடந்த 2016 ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறினார். 

இங்கிலாந்தில் உள்ள விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப் படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் சில குமுறல்களை பதிவிட்டுள்ளார் அவர். அந்த பதிவில், என்னை விமர்சிக்கும் மரியாதைக்குரியவர்களே, என்னுடைய பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தன்னை திருடன் என்று அழைப்பதை நிறுத்த வேண்டும் எனவும் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.