​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆதர்ஷ் என்ற பெயரிலான கனவு ரயில்வே திட்டம் இன்னும் ஓராண்டில் நிறைவடையும் : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

Published : Dec 06, 2018 9:41 PM

ஆதர்ஷ் என்ற பெயரிலான கனவு ரயில்வே திட்டம் இன்னும் ஓராண்டில் நிறைவடையும் : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

Dec 06, 2018 9:41 PM

சென்னை ஆவடி ரயில் நிலையத்தை மேம்படுத்தும் ஆதர்ஷ் என்ற பெயரிலான கனவு ரயில்வே திட்டம் இன்னும் ஓராண்டில் நிறைவடையும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

ஆவடி ரயில் நிலையத்தில் ஏற்கனவே ஒரு பயணச்சீட்டு அலுவலகம் உள்ள நிலையில் இரண்டாவது பயணச்சீட்டு அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரயில் நிலையத்தின் இரண்டு பக்கங்களிலும் பயணச்சீட்டு அலுவலகம் இருப்பதாகத் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டு லிஃப்டுகள் மற்றும் இரண்டு எஸ்கலேட்டர்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.