​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரள வெள்ள நிவாரணப் பணிகளுக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு

Published : Dec 06, 2018 9:34 PM

கேரள வெள்ள நிவாரணப் பணிகளுக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு

Dec 06, 2018 9:34 PM

கேரள வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மேலும் 3048.39 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்மட்டக் கூட்டத்தில், வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட கேரளா, ஆந்திரா, நாகாலாந்து மாநிலங்களில் நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ராதா மோகன்சிங் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில், கேரளாவுக்கு 3048.39  கோடி ரூபாயும்,  ஆந்திராவுக்கு 539.52 கோடி ரூபாயும், நாகாலாந்துக்கு 131.16 கோடி ரூபாயும் ஒதுக்குவது GFX OUT என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.