​​ ரூ.2,500 கோடியை வட்டியில்லா கடனாக வழங்க எத்தியாட் விமான நிறுவனத்திடம் ஜெட் ஏர்வேஸ் கோரிக்கை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரூ.2,500 கோடியை வட்டியில்லா கடனாக வழங்க எத்தியாட் விமான நிறுவனத்திடம் ஜெட் ஏர்வேஸ் கோரிக்கை

Published : Dec 06, 2018 8:32 PM

ரூ.2,500 கோடியை வட்டியில்லா கடனாக வழங்க எத்தியாட் விமான நிறுவனத்திடம் ஜெட் ஏர்வேஸ் கோரிக்கை

Dec 06, 2018 8:32 PM

ஐக்கிய அரபு அமீரகத்தின் எத்தியாட் (Etihad) விமான நிறுவனத்திடம் இருந்து, சுமார் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயை, வட்டியில்லா கடனாக தருமாறு ஜெட் ஏர்வேஸ் கோரியிருக்கிறது...

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடந்த பல மாதங்களாக, கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது..

இதனால், தனது விமானிகளுக்கும், ஊழியர்களுக்கும் சரிவர சம்பளம் தர முடியாமல், சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.. இருப்பினும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்டெடுக்கும் முயற்சியில், அதன் தலைவர் நரேஷ் கோயல் தீவிரம் காட்டி வருகிறார்..

இந்த வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தின், அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயல்படும், எத்தியாட் (Etihad) விமான நிறுவனத்திடம் இருந்து, சுமார் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயை வட்டியில்லா கடனாக வழங்குமாறு கோரியிருக்கிறார்..

தனது நிறுவன பங்குகளை, எத்தியாட் (Etihad) நிறுவனத்திடம் 49 விழுக்காடு வரையில் வழங்கி, கடன்பெற திட்டமிட்டிருந்த நிலையில், இந்த தகவல் வெளியாகியிருக்கிறது..