​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மயிலாப்பூர் மயில் சிலை மாற்றப்பட்ட விவகாரத்தை விசாரிக்க மூவர் குழு

Published : Dec 06, 2018 8:03 PM

மயிலாப்பூர் மயில் சிலை மாற்றப்பட்ட விவகாரத்தை விசாரிக்க மூவர் குழு

Dec 06, 2018 8:03 PM

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாற்றப்பட்டதென்ற புகாரை விசாரிக்க மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் இந்துசமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் ஆர். மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்துசமய அறநிலையத்துறையின் வழக்கறிஞர், மயில் சிலை விவகாரத்தை விசாரிக்க ராமேஸ்வரம், மதுரை மீனாட்சியம்மன் கோயில்களின் இணை ஆணையர்கள், அறநிலையத்துறை ஆய்வாளர் கொண்ட மூவர் குழு அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

அப்போது, இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏற்கனவே நடத்தி வரும் விசாரணையை தொடரலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். விசாரணை குறித்த அறிக்கைகளை 2 வாரங்களில் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.

இதேபோல, ஸ்ரீரங்கம் கோயில் கும்பாபிஷேகத்தின்போது சிலைகள், கதவுகள், நகைகள் மாற்றப்பட்டதாக யானை ராஜேந்திரன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலை கடத்தலில் ஈடுபடும் வெளிநபர்கள் சிக்குவதாகவும், நகைகளை திருடிய இந்து சமய அறநிலையத் துறையினர் அரசு ஊதியத்தில் சுகமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, ஒரு வாரத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.