​​ மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் மேகதாது அணை தீர்மானம் இல்லை - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் மேகதாது அணை தீர்மானம் இல்லை - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Published : Dec 06, 2018 7:44 PM

மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் மேகதாது அணை தீர்மானம் இல்லை - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Dec 06, 2018 7:44 PM

மேகதாது அணை பிரச்சனை தொடர்பான தீர்மானம், மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கும் தீர்மானமாக உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீர்மானமானது மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் இல்லை என்றார்.
இருப்பினும் டெல்டா மக்கள் நலனுக்காக தீர்மானத்தை ஆதரித்ததாக ஸ்டாலின் கூறினார்.

பின்னர் பேசிய சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராமசாமி, மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாகத் தெரிவித்தார்.