​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேற்குவங்கத்தில் அமித்ஷா தொடங்கி வைக்க இருந்த பாஜக ரத யாத்திரைக்கு அனுமதி மறுப்பு

Published : Dec 06, 2018 7:32 PM

மேற்குவங்கத்தில் அமித்ஷா தொடங்கி வைக்க இருந்த பாஜக ரத யாத்திரைக்கு அனுமதி மறுப்பு

Dec 06, 2018 7:32 PM

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தலைவர் அமித்ஷா தொடங்கி வைக்க இருந்த ரத யாத்திரைக்குக் கொல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி அளிக்க மறுத்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கூச்பிகாரில் நாளை பாஜகவின் ரத யாத்திரையை அக்கட்சியின் தலைவர் அமித்ஷா தொடக்கி வைப்பதாக இருந்தது. இந்த யாத்திரையை மாநிலத்தின் 24 மாவட்டங்கள் வழியாக 40 நாட்களுக்கு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

யாத்திரைக்கு மாநில அரசு அனுமதி அளிக்காததால் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், 24 மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கையைப் பெற்ற பின் பரிசீலிப்பதாகத் தெரிவித்ததுடன், ஜனவரி 9வரை யாத்திரையைத் தொடங்கக் கூடாது என உத்தரவிட்டது. இதனால் கூச்பிகாரில் நாளை பாஜகவின் ரத யாத்திரையைத் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.