​​ ஸ்ரீவைகுண்டம் அணை தொடர்பான வழக்கு: தமிழக அரசுக்கு எதிராக ஏன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவில்லை - நீதிபதிகள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்ரீவைகுண்டம் அணை தொடர்பான வழக்கு: தமிழக அரசுக்கு எதிராக ஏன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவில்லை - நீதிபதிகள்

Published : Dec 06, 2018 7:25 PM

ஸ்ரீவைகுண்டம் அணை தொடர்பான வழக்கு: தமிழக அரசுக்கு எதிராக ஏன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவில்லை - நீதிபதிகள்

Dec 06, 2018 7:25 PM

ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து சட்டவிரோதமாக தண்ணீர் வழங்கப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு எதிராக ஏன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மக்களுக்கு ஆயிரம் லிட்டர் தண்ணீர் 170 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், ஆனால் தொழிற்சாலைகளுக்கு 10 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுவதால் அரசுக்கு 4 ஆயிரத்து 556 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அணையில் வணிகரீதியாக தண்ணீர் எடுக்க பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து பசுமை தீர்ப்பாய உத்தரவை நிறைவேற்றவில்லை என தமிழக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஏன் வழக்கு தொடரப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தண்ணீர் பெற்று பலனடையும் நிறுவனங்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.