​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குறி சொல்வதாகக் கூறி பழ வியாபாரி வீட்டில் ரூ.10 லட்சம், 15 சவரன் நகை கொள்ளை

Published : Dec 06, 2018 7:20 PM

குறி சொல்வதாகக் கூறி பழ வியாபாரி வீட்டில் ரூ.10 லட்சம், 15 சவரன் நகை கொள்ளை

Dec 06, 2018 7:20 PM

காஞ்சிபுரத்தில் குறி சொல்வதாக பழ வியாபாரியின் வீட்டிற்குள் நுழைந்து பணம், நகைகளை கொள்ளையடித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மதுராந்த தோட்டத்தைச் சேர்ந்த மல்லிகா என்பவர் பேருந்து நிலையத்தில் பழக்கடை வைத்துள்ளார். இவரிடம் பொய்யாகுளத்தைச் சேர்ந்த தினேஷ் என்ற இளைஞர் குறி சொல்வதாகக் கூறி பழகியுள்ளார். அடிக்கடி அவரது வீட்டிற்கும் சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் மல்லிகாவின் வீட்டில் 10 லட்சம் ரூபாயும், 15 சவரன் நகைகளும் திருடு போகவே புகாரின் அடிப்படையில் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் தினேசிடம் விசாரிக்கையில் அவர் கொள்ளையடித்தது உறுதியானது. அவரிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தினேஷை போலீசார் கைது செய்தனர்.