​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்விக்கி நிறுவன டெலிவரி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Published : Dec 06, 2018 7:12 PM

ஸ்விக்கி நிறுவன டெலிவரி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Dec 06, 2018 7:12 PM

ஊதிய குறைப்பைக் கண்டித்து, சென்னையில் உள்ள ஸ்விக்கி நிறுவனத்தை டெலிவரி ஊழியர்கள் முற்றுகையிட முயன்றனர்.

ஸ்விக்கி செயலியில் ஆர்டர் செய்யும் உணவு வகைகளை வீட்டுக்கே டெலிவரி செய்யும் பணியில், சென்னையில் 10 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஒரு ஆர்டரை டெலிவரி செய்யும்போது 40 ரூபாயும், ஒரே நேரத்தில் 2 டெலிவரி என இருந்தால் 2-வது ஆர்டருக்கு 20 ரூபாயும் ஊதியம் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த ஒரு மாதமாக, இந்தக் கட்டணம் 35 ரூபாய் என்றும், இணைப்பு ஆர்டர் டெலிவரிக்கு 10 ரூபாய் என்றும் குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை தற்போது நிறுத்தப் பட்டுவிட்டதாக டெலிவரி ஊழியர்கள் புகார் எழுப்புகின்றனர். பழையமுறையில் ஊதியம் கோரி, 3-ஆம் நாளாக அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நந்தனத்தில் உள்ள ஸ்விகியின் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட திரண்ட அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக ஸ்விக்கி அலுவலர்கள் அவர்களிடம் உறுதியளித்தனர்.