​​ புயல் பாதித்த பகுதிகளில், பிரதமரின் சார்பில் தான் பார்வையிட்டதாகப் பொன்.ராதாகிருஷ்ணன் பதில்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புயல் பாதித்த பகுதிகளில், பிரதமரின் சார்பில் தான் பார்வையிட்டதாகப் பொன்.ராதாகிருஷ்ணன் பதில்

Published : Dec 06, 2018 6:55 PM

புயல் பாதித்த பகுதிகளில், பிரதமரின் சார்பில் தான் பார்வையிட்டதாகப் பொன்.ராதாகிருஷ்ணன் பதில்

Dec 06, 2018 6:55 PM

புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிடப் பிரதமர் வரவில்லையே எனக் கேட்டதற்குப் பிரதமரின் சார்பாகத் தான் பார்வையிட்டதாக மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நடிகை பிரியங்கா சோப்ராவின் திருமண வரவேற்பு விழாவுக்குச் செல்ல நேரம் ஒதுக்கும் பிரதமர், தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட ஏன் வரவில்லை எனச் செய்தியாளர்கள் வினவினர்.

அதற்குக் கடந்த ஆண்டுகளில் சென்றதையெல்லாம் சமூக ஊடகங்களில் குறிப்பிடுவதாகத் தெரிவித்தார். பிரதமரின் சார்பாகத் தானும் நிர்மலா சீதாராமனும் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டதாகத் தெரிவித்தார்.