​​ காங்கிரசும், பாஜகவும் சபரிமலை விவகாரத்தை அரசியலாக்குகின்றன - கேரள அரசு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காங்கிரசும், பாஜகவும் சபரிமலை விவகாரத்தை அரசியலாக்குகின்றன - கேரள அரசு

Published : Dec 06, 2018 6:44 PM

காங்கிரசும், பாஜகவும் சபரிமலை விவகாரத்தை அரசியலாக்குகின்றன - கேரள அரசு

Dec 06, 2018 6:44 PM

காங்கிரசும், பா.ஜ.க.வும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு சபரிமலை கோயில் விவகாரத்தை அரசியலாக்கி வருவதாக கேரள மாநில தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், சபரிமலை விவகாரம் குறித்து பேசியுள்ள கேரள மாநில தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதற்கு கேரள அரசு தடையாக இல்லை என்று குறிப்பிட்டார்.

நாள்தோறும் நூற்றுக்கணக்கான பெண்கள் சபரிமலை கோயிலுக்கு சென்று கொண்டுதான் இருப்பதாக அமைச்சர் கூறினார். மேலும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றுவதே கேரள அரசின் நிலைப்பாடு என்றும் கடகம்பள்ளி சுரேந்திரன் குறிப்பிட்டார்.