​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்காவில் பருவநிலை மாற்ற எதிரொலியால் வேளாண் உற்பத்தி பாதிப்பு

Published : Dec 06, 2018 6:28 PM

அமெரிக்காவில் பருவநிலை மாற்ற எதிரொலியால் வேளாண் உற்பத்தி பாதிப்பு

Dec 06, 2018 6:28 PM

பருவநிலை மாற்றம், அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களில், உணவு உற்பத்தியை கடுமையாக பாதித்திருப்பதாக, வேளாண்துறை வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

அதிகப்படியான கார்பன் வெளியேற்றத்தால், ஓசோன் படலம் பாதிக்கப்பட்டு, புவியின் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால், பனிப்பாறைகள் உருகுவதோடு, பருவநிலைகளிலும் மாற்றத்தை உருவாக்கிவிட்டிருக்கிறது. இதன் எதிரொலியாக, அதிகப்படியான வெப்பம், மழை, வெள்ளம், வறட்சி ஆகியவை மாறி மாறி ஏற்படுகின்றன.

இந்த வகையில், அமெரிக்காவின், இல்லினாய்ஸ் (Illinois) உள்ளிட்ட, பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் சாகுபடி நடைபெறும் மத்திய மேற்கு மாகாணங்களில், அண்மை காலமாக, பருவநிலை மாற்றத்தால், அதிகப்படியான வெப்பமும், வறட்சியும் ஏற்பட்டிருக்கிறது.

இதனால், கோதுமை உள்ளிட்ட பயிர் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டு, கணிசமான அளவிற்கு மகசூல் குறைந்திருப்பதாக, வேளாண்துறை வல்லுநர்கள் கூறியிருக்கின்றனர்.