​​ முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவுக்கு வேண்டாவெறுப்பாக கைகொடுத்த அதிபர் டிரம்ப்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவுக்கு வேண்டாவெறுப்பாக கைகொடுத்த அதிபர் டிரம்ப்

Published : Dec 06, 2018 6:12 PM

முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவுக்கு வேண்டாவெறுப்பாக கைகொடுத்த அதிபர் டிரம்ப்

Dec 06, 2018 6:12 PM

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவுக்கு வேண்டா வெறுப்பாக கைகொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபரான ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ்ஷின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர்களான பாரக் ஒபாமா, பில் கிளிண்டன் ஆகியோர் தங்கள் மனைவியருடன் அமர்ந்திருந்தனர்.

அப்போது அங்கு தனது மனைவி மெலனியா டிரம்புடன் வந்த டொனால்டு டிரம்ப் ஒபாமாவுக்கும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவுக்கும் இயந்திரத் தனமாக கை கொடுத்துவிட்டு இறுக்கமான முகத்துடன் விலகி அமர்ந்தார்.

முன்னாள் அதிபர் பில் கிளிண்டனையும் அவரது மனைவியும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டனையும் டிரம்ப் பொருட்படுத்தாமல் அமர்ந்ததும் சூழலின் சங்கடத்தை அதிகரித்தது.