​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீனாவின் ஹுவேய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கனடாவில் கைது

Published : Dec 06, 2018 6:06 PM

சீனாவின் ஹுவேய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கனடாவில் கைது

Dec 06, 2018 6:06 PM

சீனாவின் ஹுவேய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்சூ அமெரிக்க அரசின் அறிவுறுத்தலால் கைது செய்யப்பட்டது இரு நாடுகளிடையான வணிக உறவை மேலும் பாதிக்கும் எனச் சீனா தெரிவித்துள்ளது.

சீனாவும் அமெரிக்காவும் ஒன்றின் இறக்குமதிப் பொருட்களுக்கு வரியை உயர்த்தி ஏற்கெனவே வணிகப் போட்டியில் உள்ளன. இந்த வணிகப் போரை 3மாதங்களுக்கு நிறுத்தி வைக்க இருநாட்டு அதிபர்களும் அண்மையில் முடிவெடுத்தனர்.

இந்நிலையில் அமெரிக்க அரசின் அறிவுறுத்தலால் சீனாவின் ஹுவேய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்சூவைக் கனடா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவோ கனடாவோ கைதுக்கான காரணத்தை இதுவரை தெரிவிக்காத நிலையில் இதற்குச் சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. சீனா - அமெரிக்கா இடையே வணிகப் போட்டி நிலை தளர்வடையும் என எதிர்பார்த்துள்ள சூழ்நிலையில் இந்தச் செயல் அந்த நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் உள்ளதாகச் சீனா தெரிவித்துள்ளது.