​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஹாங்காங்கில் விபத்தில் சிக்கவிருந்த ஏர் இந்தியா விமானம்

Published : Dec 06, 2018 5:48 PM

ஹாங்காங்கில் விபத்தில் சிக்கவிருந்த ஏர் இந்தியா விமானம்

Dec 06, 2018 5:48 PM

டெல்லியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஹாங்காங்கில் பெரும் விபத்தில் சிக்க நேர்ந்ததால் அதன் இரண்டு விமானிகள் பணியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 20-ம் தேதி டெல்லியில் இருந்து 197 பயணிகளுடன் புறப்பட்ட போயிங் 787 ரகத்தைச் சேர்ந்த ஏர் இந்தியா விமானம், ஹாங்காங்கில் தரையிறங்கவிருந்தது.

ஆனால், ஓடுதளத்திற்கு 4 புள்ளி 8 கிலோ மீட்டருக்கு முன்னதாகவே சீரான உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம், சரசரவென கீழே இறங்கியது. விமானத்தில் இருந்தவர்கள் அச்சத்தில் உறைந்து போயினர்.

தரை நெருங்குவதைக் குறிக்கும் எச்சரிக்கை மணியை அடுத்து, சுமார் 200 அடி உயரத்தில் விமானத்தை விமானிகள் படிப்படியாக மேலே பறக்கச் செய்ததால். வட்டமடித்துவிட்டு மீண்டும் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இதுகுறித்து ஹாங்காங் போக்குவரத்துத்துறை தீவிர விபத்து அறிக்கை அளித்தது. அதனடிப்படையில் 2 விமானிகள், பறக்கும் பணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். வான் போக்குவரத்து கட்டுப்பாடு சமிக்ஞை சரிவர கிடைக்காததால் விபத்தில் சிக்கவிருந்ததாகக் கூறப்படுகிறது.