​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஈரானில் காவல்துறை தலைமையகம் அருகே தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 போலீசார் பலி

Published : Dec 06, 2018 5:33 PM

ஈரானில் காவல்துறை தலைமையகம் அருகே தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 போலீசார் பலி

Dec 06, 2018 5:33 PM

ஈரானில் காவல்துறை தலைமையகம் அருகே தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 போலீசார் கொல்லப் பட்டனர். அந்நாட்டில் சபாஹர் என்ற துறைமுக நகரில் (Chabahar) உள்ள காவல்துறை தலைமையகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்த நபர் திடீரென காரை வெடிக்க வைத்துள்ளார்.

இந்த தாக்குதலில் 3 போலீசார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 20-க்கும் அதிகமானோர் படுகாயமுற்றனர். காவல்துறை உயர் அதிகாரிகளைக் குறிவைத்து இந்த தற்கொலைப்படைத் தாக்குதல் அரங்கேற்றப்பட்டிருப்பதாக ஈரான் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுவரை இந்தத் தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஈரானில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.