​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு பொது மருத்துவமனை லிஃப்ட் அமைந்துள்ள இடத்தின் அடிப்பகுதியில், ஆண் சடலம்

Published : Dec 06, 2018 5:09 PM

அரசு பொது மருத்துவமனை லிஃப்ட் அமைந்துள்ள இடத்தின் அடிப்பகுதியில், ஆண் சடலம்

Dec 06, 2018 5:09 PM

சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை லிஃப்ட் அமைந்துள்ள இடத்தின் அடிப்பகுதியில், ஆண் சடலம் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

image

மருத்துவமனையின் முதல் கட்டிடத்தின் பின்புறம் மருத்துவக் கழிவுகளை கொண்டு செல்லும் லிஃப்டின் அடிப்பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக மருத்துவ அலுவலர்கள் பூக்கடை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், லிஃப்டின் அடிப்பகுதியில் அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் கிடந்ததைக் கண்டுபிடித்து மீட்டனர். விசாரணையில், கடந்த சனிக்கிழமையன்று அந்த லிஃப்டை பழுதுபார்க்க வந்த நெக்சஸ் எலவேட்டர்ஸ் (NEXUS ELEVETORS ) நிறுவனத்தினர், 3-வது மாடியில் லிஃப்டுக்கான கதவை மீண்டும் பொருத்தாமல் அலட்சியமாக வைத்துவிட்டுச் சென்றது தெரியவந்தது.

இதையறியாமல் அந்த நபர் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்றும், மீட்கப்பட்ட உடலில் சிறுநீர் பை இருந்ததால், உயிரிழந்தது நோயாளியாக இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். உயிரிழந்தவரை அடையாளம் காண போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்